பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (11) சமரச சபையில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் பதுளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பதுளை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி நேற்று இரு தரப்பினரும் மத்தியஸ்த சபைக்கு அழைக்கப்பட்டு வழக்கை தீர்த்து வைக்க விரும்புவதாக பவானி ரங்குநாதன் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் சம்மதத்துடன் வழக்கை தீர்த்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.