சிவப்பு முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்ட எரிவாயு குக்கர் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உடுநுவர எல்பிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டர் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த முதலாம் திகதி இந்த எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றைய தினம் சிவப்பு முத்திரையுடன் பாதுகாப்பான புதிய சிலிண்டர் சந்தைக்கு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)