அதிகம் மத்திய வங்கியின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்காக, இலங்கை மத்திய வங்கி, ஓய்வூதிய நிலுவையாக 70 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போதைய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தமது முன்னைய சம்பளத்தில் 74 வீதத்தை ஓய்வூதியமாகவும் மாதத்துக்கு 04 லட்சம் ரூபாவை சம்பளமாகவும் பெறுகிறார் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆளுநராக இருந்த இந்திஜித் குமாரசுவாமி மாதச் சம்பளமாக 150ஆயிரம் ரூபாவை பெற்றார்.
அர்ஜூன் மஹேந்திரன் 70ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெற்று வந்தார்.
இந்நிலையில், அஜித் நிவாட் கப்ரால், தற்போது பெறும் 04 லட்சம் ரூபா சம்பள அடிப்படையில் அடுத்த ஓய்வூதியத்தை பெறவுள்ளார்.