இலங்கையிடம் தற்போது கையிருப்பில் இருக்கும் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே உபயோகிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன குறிப்பிடுகின்றார்.
அடுத்த வருடத்திற்கான இறக்குமதித் தேவைகளுடன் ஒப்பிடுகையில், இரண்டரை வாரங்கள் மட்டுமே கையிருப்பில் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான இலங்கையின் இறக்குமதித் தேவை சுமார் 23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது வரலாற்றில் மிக மோசமான வெளிநாட்டு சொத்துக்களின் வீழ்ச்சி என்றும், நாட்டின் நிலைமையை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து அடுத்து என்ன செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மாதத்துக்குள் பாரியளவில் அந்நியச் செலாவணியைப் பெறாவிட்டால் நாடு மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது மிகவும் தாமதமானது என்று அவர் கூறினார், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டிலிருந்து அரசாங்கம் சுமார் 500 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியைப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)