மத்திய மாகாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
சுமார் 306 பேருக்கு நாளை மறுதினம் இவ்வாறு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவித்தல் கடிதமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்றும், இந்த நியமனங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.