இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது 60 கர்ப்பிணிப் பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 89 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் தற்போது கோவிட்க்கான பூஸ்டர் தடுப்பூசியைப் பெறலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன் சினோபார்ம் அல்லது வேறு ஏதேனும் கோவிட் தடுப்பூசியைப் பெற்ற எவரும் கர்ப்ப காலத்தில் மூன்றாம் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.