நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கூப்பன் திட்டம் முன்மொழியப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எரிபொருள் பாவனையை குறைக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள மக்கள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)