2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை அணியுடன் மஹேல ஜயவர்தன இணைவதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் தகுதி சுற்று போட்டியில் அவரது பங்களிப்பே அணியின் முன்னேற்றத்துக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய நியமனம் இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண அணியில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.