எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என டிசம்பர் 10 ஆம் திகதி அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெற்றோல் 35 ரூபாவாலும், டீசல் 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்கப்பட்டு எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எனினும், இந்தக் கடிதத்திற்கு நிதி அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இதேவேளை எதிர்கால எரிபொருள் தேவைக்கு போதுமான எரிபொருளை ஆர்டர் செய்வதற்கு டொலர்கள் வழங்கப்படாமையால் கடன் கடிதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)