தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடப் போவதில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
தனக்கு மிகவும் பிடித்தமானது இடம் நீதித்துறை என்றும் அதற்கு தாம் ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"எங்களுக்கு மிக முக்கியமான விஷயம் இந்த நாட்டு மக்கள். அவர்களால்தான் இந்தத் தொழில். அவர்களால்தான் நீதிபதிகள் அமர்வில் இருக்கிறார்கள். அனைத்தும் அவர்களின் கடைசி விருப்பத்திற்கு இரண்டாவதாகும்" என்றார். (யாழ் நியூஸ்)