பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் இலங்கை பொறியாளர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (06) கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு 10 தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் தூதரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தனர்.
இக்கொலைக்கு காரணமான அனைத்து தீவிரவாதிகளும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கடிதம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட பொறியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள புத்திஜீவிகள் மன்றம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வலையமைப்பு, ஐக்கிய தேசிய அமைப்புகள், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், லக்மவ தியனியோ பெண்கள் இயக்கம் போன்ற 10 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்த விடையம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துபதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஒட்டுமொத்த இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதமர் விமர்சித்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)