சிலிண்டரிலோ, எரிவாயுவிலோ பிரச்சினை இல்லை; அடுப்பில் தான் பிரச்சினை உள்ளது! அறிவுபூர்வமாக யோசிக்க வேண்டுகிறார் திஸ்ஸ குட்டியாராய்ச்சி!

சிலிண்டரிலோ, எரிவாயுவிலோ பிரச்சினை இல்லை; அடுப்பில் தான் பிரச்சினை உள்ளது! அறிவுபூர்வமாக யோசிக்க வேண்டுகிறார் திஸ்ஸ குட்டியாராய்ச்சி!


கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக தவறான ஒரு செய்தி பரவுவதை நான் அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தேன். நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் எனக்கு காட்டுங்கள் எரிவாயு சிலிண்டர் எங்கு வெடித்தது? எங்குமே எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை, எரிவாயு அடுப்பு தான் வெடிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


இது சரியாக வயிற்று வலியாக இருக்கும் போது கால் வலி பற்றி பேசுவதை போன்ற ஒரு செயல். ஆகவே நான் மிகத்தெளிவாக ஞாபகமூட்ட விரும்புகின்றேன். எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லையென மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள். எரிவாயு சிலிண்டரில் பிரச்சினை இல்லை என கூறுகின்றார்கள்.


ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் நன்றாக தெரிகின்றது எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை. உண்மையாகவே இந்த பிரச்சினை எரிவாயு அடுப்பில் தான் உள்ளது.


நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நாம் இப்போது பரிசோதனை செய்ய வேண்டியது எரிவாயு தொடர்பாகவோ, எரிவாயு சிலிண்டர் தொடர்பாகவோ அல்ல. எரிவாயு அடுப்புக்கள் தொடர்பாகவே தேடிப்பார்க்க வேண்டும்.


தற்பொழுது சந்தைக்கு வரும் புதிய அடுப்புக்களில் மேலாக ஒரு கண்ணாடி உள்ளது. அப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் மிகவும் விலை அதிகமானவை. இப்படியான பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அடுப்புக்களே இன்று சந்தையில் குறைந்த விலையில் 2, 3 மற்றும் 6 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன.


ஆகவே சிலவேளை இவ்வாறான அடுப்புக்கள் மிகவும் குறைந்த தரமுடையதாக இருக்கலாம். நாம் அனைத்து இடங்களிலும் வெடிப்பு சம்பவங்களில் பார்த்தது எரிவாயு அடுப்பு தான். 


ஆகவே, இந்த பிரச்சினை எரிவாயு சிலிண்டரிலோ, எரிவாயுவிலோ இல்லை. எரிவாயு அடுப்பில் தான் உள்ளதென்று ஏன் எம்மால் சிந்திக்க முடியாது.


ஆகவே இவையனைத்தையும் அரசியல் இலாப நோக்கத்திற்கு எடுத்துக்கொண்டு ஒரே வரிசையில் செல்வதால் தான் பிரச்சினை. எமது நாட்டின் நிலை இன்று அதுதான், யாராவது ஒன்றை கூறினால் அதை பெரிதுப்படுத்துவது. இளைஞர்களும் அப்படித்தான் ஊடகங்களும் அப்படித்தான். ஆகவே அறிவுபூர்வமாக சற்று வேறு விதத்தில் யோசிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.



Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News