வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 72 மணிநேரத்துக்குள் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை அல்லது விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட ரபிட் அன்டிஜென் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.