கண்டி வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து சிறுமிகளை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஐந்து சிறுமிகளும் கடந்த 06ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய குழந்தைகளில் ஒன்று நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) பிற்பகல் வரை 16-18 வயதுடைய ஏனைய நான்கு சிறுவர்கள் தொடர்பில் பொலிஸாரால் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இச்சிறுமிகள் புஸ்ஸல்லாவ, வத்தேகம மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் பரிசோதகர் பாலித இளங்கசேகர தலைமையில் சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)