ஒமிக்ரோன் பிறழ்வானது தென் ஆபிரிக்காவைப் போன்று இலங்கையிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் பிறழ்வு கண்டு பிடிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள் தென் ஆபிரிக்க விஞ்ஞானிகள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தரவுகளை மேற்கோட்காட்டி கலாநிதி சந்திம ஜீவந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வைரஸ் பிறழ்வுகள் தடுப்பூசிகளால் பெற்றுக் கொள்ளப்பட்ட பாதுகாப்பை மீறி தாக்கத்தை ஏற்படுத்தினாலும் , மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் பிறழ்விலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் இந்த பிறழ்வு வேகமாகப் பரவுகின்றது. எனினும் அதே வேகத்துடன் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் என்று கருத முடியாது.
காரணம் இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-எம்.மனோசித்ரா