அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் ஒருவரும் மேலும் ஏழு மாணவர்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
மிச்சிகனின் ஒக்ஸ்போர்ட் நகரின் ஒக்ஸ்போர்ட் உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி, 17 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்டு சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.