இந்தோனேஷியாவில் இன்று (டிச.,14) காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் இன்று காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மவுமர் என்ற இடத்தில் இருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு இருப்பிடத்தை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால், இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாகலாம் என பசுபிக் சுனாமி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்த நிலையில் இலங்கைக்கு பாதிப்பில்லை என இலங்கை சுனாமி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு இந்திய கடற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 2004ல் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.