அமெரிக்காவில் கென்டகி, இல்லினாய்ஸ், ஒர்கன்சஸ் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.
அமெரிக்காவின் ஒர்கன்சஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசி மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இலட்சக்கணக்கான மக்கள் இருளில் தவித்தனர்.
கென்டக்கியின் மேபீல்ட் பகுதியில், சூறாவளி தாக்கியதால் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டென்னசியில், சூறாவளி காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெபியன்ஸ் மற்றும் நியூ மெல்லே நகரில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
கென்டகியில் ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு பலர் சிக்கி கொண்டனர். அவரை மீட்கும் பணி விரைவாக நடந்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.