லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார்.
இந்த ஆவணத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள எம்.பி, "லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 18 லீட்டர் சிலிண்டரின் எடையை 12.5 கிலோவிலிருந்து 9.2 கிலோவாக மாற்றியபோது, ப்ரோபேன்: பியூட்டேன் கலவையை 20:80 இலிருந்து 50:50 ஆக மாற்றியது என்பதற்கு இது தெளிவான சான்று" என்றார்.
இவ்வாறான 50:50 கலவை கொண்ட 18 லீட்டர் சிலிண்டர்களை அரசு நிராகரித்ததும், அதன் இருப்புக்கு என்ன ஆனது? என்று ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்..
கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவை பற்றிய விவாதம் எழுந்துள்ளது. (யாழ் நியூஸ்)