முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு தொன் யூரியாவின் விலை 1,282 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த விலையில் யூரியாவை கொண்டு வந்து நெல் பயிரிட்டால் ஒரு கிலோ அரிசியின் விற்பனை விலை ரூ.500ஐ தாண்டும் என அவர் கூறினார்.
விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆர் இதனை தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் 25 கிலோ யூரியா மூட்டை ரூ. 9,000க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)