இதனை டெய்லி நியூஸ் தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கையில், 20 எம்.பிக்களின் வீடுகளில் இருந்து குடிநீர் கட்டண நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேரும், ஓய்வூதியம் பெறுகின்ற 10 முன்னாள் எம். பிக்களும், மேலும் தற்போது உயிருடன் இல்லாத 10 முன்னாள் எம்பிக்களும் இதில் அடங்குவர்.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டண நிலுவையில் ரூ. 18 லட்சம் தற்போதைய பாராளுமன்றத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் மாத்திரம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
இது தவிர, கொரோனா தொற்றுநோய் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் கீழ் எம்.பி.க்களின் செலுத்தத் தவறிய பணம் உள்ளடக்கப்பட்டதா என்றும் அந்த செய்தி அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து குறித்த நிலுவைத் தொகையை மீட்பதாக உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அந்த அறிக்கையில், பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களுக்கு அமைச்சர் அபராதம் விதிப்பாரா அல்லது அவர்களை விட்டுவிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அப்படி நடந்தால் அது பொது மக்களுக்கு இலைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாக இருக்கும் என்று செய்திக் கட்டுரை மேலும் கூறியது. (யாழ் நியூஸ்)