தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்கரான வைரஸின் முக்கிய மூன்று அறிகுறிகள் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே தற்போது ஒமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறதா? மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதா? தடுப்பூசிகள் போட்டாலும் அதன் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, ஒமைக்ரான் வைரஸ் பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறிகளையே கொண்டுள்ளது. இது முந்தைய கொரோனா மாறுபாடுகளை விட, வெவ்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒமிக்ரான் கோவிட் மாறுபாடு பெரும்பாலான மக்களுக்கு லேசான நோயை" ஏற்படுத்துகிறது என்று சுகாதாரத் தலைவர்கள் நம்புகிறார்கள், ஆனால் இது முந்தைய விகாரங்களை விட வெவ்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.
தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான Maria Van Kerkhove, இந்த ஒமைக்ரான் வைரஸின் முக்கிய மூன்று அறிகள் என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.
- சோர்வு
- உடல் வலிகள்
- தலைவலி
இதைத் தவிர இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி ஒருவருக்கு அதிக அளவில் உடலின் வெப்ப நிலை உயர்வது மற்றும் மிக அதிக துடிப்பு விகிதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான ராய்ட்டர்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், ஒமைக்கரானால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதே சமயம் மற்றொரு அதிகாரி, இந்த வைரஸ் லேசான நோயிலிருந்து கடுமையான நோய் வரை செல்லுவதாக எச்சரித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் Botswana-வில் உள்ள ஒரு சுகாதார இயக்குனர், பாதிக்கப்பட்ட 19 பேரில் 16 பேருக்கு அறிகுறிகள் இல்லை, மற்ற மூவருக்கு மிக மிக லேசான நோய் இருந்ததாக தெரிவித்துள்ளார்.