2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தில் 15 பில்லியன் ரூபா பிணையத்தில் குற்றவியல் நம்பிக்கை மீறல் தொடர்பான 22 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பத்து பேர் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று (06) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதியரசர்களான அமல் ரணராஜா, நாமல் பலாலே மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கிற்கு பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கை தொடர முடியாது என சுட்டிக்காட்டினார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இன்று (06) தீர்ப்பை அறிவித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினரான நீதிபதி ஆதித்ய படபெந்திகே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என்று கூறினார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்யப்படுமா? அகற்றவா? சட்டமா அதிபர் திணைக்களம், மாற்றுச் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதா என்பதை தீர்மானிக்கும் திகதியை நீதிமன்றத்திற்கு வழங்குமாறு கோரியதையடுத்து, தீர்மானம் ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)