மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த பிரதேசத்தை இந்தியாவிற்கு வழங்கி அதன் ஆதாயத்தை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.