SpaceX இன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink ஊடாக இலங்கைக்கான இணைய அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் Starlink இணையச் சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக SpaceX உடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நாட்டில் இணைய சேவைகளை தொடங்குவதற்கான ஒழுங்குமுறை அம்சங்கள் மற்றும் முன்நிபந்தனைகள் குறித்து முதல் சுற்று விவாதங்கள் கவனம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க்கின் ராக்கெட் நிறுவனமான SpaceX இன் செயற்கைக்கோள் இணையப் பிரிவான StarLink, நவம்பர் 01ஆம் திகதி இந்தியாவில் தனது வணிகத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)