ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் இணக்கப்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களின்படி, இந்த அரசியல் கூட்டணியை நிறுவுவதில் கொழும்பில் உள்ள செல்வாக்கு மிக்க வெளிநாட்டு இராஜதந்திர தூதுக்குழு நேரடியாக ஈடுபட்டுள்ளது என்பதை பெயர் தெரியாத நிலையில் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், நாட்டின் ஆழமான வேரூன்றிய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பலவீனமான வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ரணில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்று ஆளும் கட்சி கூட்டணியின் முக்கிய நபர்கள் நம்புகிறார்கள்.
இதன்படி, ரணில் ஜனாதிபதியுடன் இணைத்து, உள்கட்சி முரண்பாடுகளை முறியடிக்கும் வகையில் அவருக்கு குறிப்பிடத்தக்க அரசாங்க பொறுப்புகளை வழங்குவது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அரசாங்கத்தில் உள்ள சிலர் கருதுகின்றனர்.
தமிழ் மொழியாக்கம் - யாழ் நியூஸ்
ஆங்கில ஆக்கம் - slguardian.org