நாட்டில் நிலவும் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மண்சரிவு இரண்டாம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நுவரெலியா பிரதேச செயலக பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், இரத்தினபுரி மாவட்டம் வெலிகேபொல, எஹலியகொட, இரத்தினபுரி, கலவான, கஹவத்த மற்றும் இம்புல்பே, மாத்தளை மாவட்டம் ரத்தோட்ட, கேகாலை மாவட்டம் மாவனெல்லை, அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய, கண்டி மாவட்டம் யட்டிநுவர, கங்க இஹல கோரலே, ஹரிஸ்பத்துவ மற்றும் கங்காவட கோரலே, களுத்துறை மாவட்டம் புலத்சிங்கள, பதுளை மாவட்டம் எல்ல, காலி மாவட்டம் நெலுவ, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
அதேநேரம், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. (யாழ் நியூஸ்)