உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக ஐ.நா கருசனை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த உயர்வு அதிகமானது என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகளை கொரோனாத் தொற்று பாதித்துவரும் நிலையில், உணவுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் பல வறிய நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்தாதான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தற்போது உணவுப் பொருட்களின் விலை கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக பட்சமாக காணப்படுவதாகவும், கடந்த வருடம் 30 வீதத்தினால் அதிகரித்திருந்ததாகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தானிய வகைகள், மரக்கறி வகைகள் மற்றும் எண்ணை வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளமை ஆய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் மரக்கறி எண்ணையின் விலை 10 வீத அதிகரிப்பைக் காட்டியிருந்ததாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கோதுமை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் கோதுமையின் விளைச்சல் குறைவடைந்தமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களை விநியோகப்பதில் உள்ள தடைகள், தொழிற்சாலைகள் மூடல், மற்றும் அரசியல் பதட்டங்கள் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிப்படுகின்றது.