தனியுரிமை அச்சுறுத்தல்: கோடிக்கணக்கான முக ரேகைகளை அளிக்க ஃபேஸ்புக் முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியுரிமை அச்சுறுத்தல்: கோடிக்கணக்கான முக ரேகைகளை அளிக்க ஃபேஸ்புக் முடிவு!


ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் தனியுரிமை குறித்த  அச்சுறுத்தல் காரணமாக அதன் முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபேஸ்புக் சேவையினை உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.  ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளையும் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. 


இந்த மூன்று செயலிகளையும் நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என்று அண்மையில் மாற்றப்பட்டது. எனினும் செயலியின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.


ஃபேஸ்புக் செயலியால் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல வருடங்களாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஃபேஸ்புக்கில் முக அங்கீகாரம் (facial recognition) என்னும் வசதி உள்ளது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள உங்கள் முகத்தை தானாகவே ஃபேஸ்புக் அங்கீகரித்துவிடும். பின்னர், உங்கள் முக ரேகை கொண்ட புகைப்படங்கள்,வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டால் இது குறித்த தகவல்களை உங்களுக்கும் வழங்கும். ஃபேஸ்புக்கின் இந்த தானியக்க முக அங்கீகார வசதியால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும்  கூறிவந்தனர்.


இதேபோல், ஃபேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரான Frances Haugen, ஃபேஸ்புக் குறித்த பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தினார். அதில், தங்களது செயலியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அறிந்தும் அதனை சரி செய்யாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்து. 


இந்நிலையில்தான், ஃபேஸ்புக்கில் இருந்து இந்த வசதியை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.