ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி பதவி விலகியுள்ளார். இந்த தகவலை ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் பராக் (பராக் அகர்வால்) எங்கள் அடுத்த CEO ஆக இருப்பார் என தெரிவித்தார்.
ஏனெனில் நிறுவனம் இப்போது அதன் நிறுவனர்களிடமிருந்து முன்னேறத் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன்.
அகர்வால் குறித்து டோர்சி கூறுகையில்,
பராக் மீது தலைமை நிர்வாக அதிகாரியாக எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர் இங்கு பணி ஆற்றியுள்ளார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, பராக் அகர்வால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான யாஹூ, மைக்ரோசாப்ட் மற்றும் AT&T ஆகியவையுடன் பணிபுரிந்துள்ளார் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)