ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னர் இணையவழி முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk ஊடாக பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நாட்கள் மற்றும் நேரத்திற்கு ஏற்ப முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, நாடு முழுவதிலும் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்களின் வருகையை தொடர்ந்து, அதன் சேவைகளைப் பெறுவதற்கு இணையவழி முற்பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் முற்பதிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் நேரத்தை ஒதுக்கி, சேவைகளைப் பெறுவதற்கு இது உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அங்கீகார நோக்கங்களுக்காக தூதரக விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)