தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலுமொரு மாகாணத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளாதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில், அதற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்பட்டன.
இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து தரங்களுக்கும் திறக்கப்படவுள்ளதாகக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.