மேல் மாகாணத்தில் திட்டமிட்டு வாகன விபத்துக்களில் ஈடுபட்டு அவ்வாறான விபத்துக்களில் ஈடுபடுபவர்களிடம் கப்பம் பெறும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணையில் தெரியவருவதாவது, விபத்துக்கள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் இந்த குழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் தலைமையகம் சமூக பொலிஸ் குழுக்களுக்கு அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)