முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே, தனது 90வது வயதில் இறையடி எய்தினார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்
1979ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரையான காலம் வரை, சிறிசேன குரே, கொழும்பு மேயராக கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக, சிறிசேன குரே, பாராளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக சிறிசேன குரே பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.