ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று எரிவாயு கசிவு ஏற்பட்டு கடைக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தாம் சில காலமாக உணவகத்தை நடத்தி வருவதாகவும், இன்று காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயுத் தாங்கி மற்றும் எரிவாயு அடுப்புக்கு இடையில் இருந்த எரிவாயுக் குழாய் திடீரென வெடித்து தீப்பிடித்ததாக வர்த்தகர் தெரிவித்தார்.
தீயினால் கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சமைத்துக்கொண்டிருந்த உணவு மற்றும் பானங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)