நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாடு மீண்டும் திறக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டை மீண்டும் திறப்பது என்பது இலங்கையில் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அர்த்தமல்ல. வைரஸிலிருந்து இன்னும் யாரும் முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதாக கருத முடியாது.
மேலும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறும், தமது குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ஒவ்வொரு தனி நபரின் நடத்தையிலும் எதிர்காலம் தங்கியிருப்பதாக அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)