அரச ஊழியர்களின் சம்பளத்தை ரூ. 10,000 இனால் அதிகரிக்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் இன்று (29) மதிய உணவு வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுவே முதல் தொழிற்சங்க போராட்டம் என அரச சேவை சம்பள அதிகரிப்பு தொடர்பான தொழிற்சங்க குழுவின் இணை அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் ஒரு வாரத்தின் பின்னர் தொழிற்சங்கங்கள் தொடர் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)