பண்டோரா பேப்பர் என்றால் என்ன? இது செய்யும் வேலை என்ன? இதை வெளியிடுபவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டோரா பேப்பர் என்றால் என்ன? இது செய்யும் வேலை என்ன? இதை வெளியிடுபவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன?


அண்மைக்காலமாக மக்கள் மத்தியிலும்,  மீடியாக்களில், பாராளுமன்றம் உற்பட, பட்டி தொட்டிகளில் உலாவரும் சொல் தான் பண்டோரா பேப்பர் என்பதாகும். கடந்த அக்டோபர் 02ஆம் திகதி ICIJ அமைப்பு வெளியிட்ட பன்டோரா பேப்பர் ஏன் முக்கியத்துவம் பெற்றது?

பண்டோரா ஒரு கிரேக்க மொழி ச்சொல் ஆகும். பண்டையகால கிரேக்க மொழியில் ரகசியம், மறைக்கப்பட்ட, திகில், மர்மம் போன்ற இடங்களுக்கு கிரேக்க மொழியில் பண்டோரா எனப்படும் சொல் பயண் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது கிரேக்க நாட்டில் பண்டைய கால (MYTHALOGY) எனும் மர்ம கதை வரும் ஒரு சொல். (OPEN THE PANDORA BOX) அந்தக் கதையில் மர்மமான பெட்டி ஒன்றை திறக்கும் போது என்னென்ன திகில்கள் புதினங்கள் ஆச்சரியங்கள் வெளிப்படுகின்றதோ இதே கருத்தை உடைய பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.  அந்தளவுக்கு பண்டோரா பேப்பரில் புதினங்களும் திகில்களும் ஆச்சரியங்களும் வெளிப்பட்டுள்ளன. காலத்திற்குக் காலம் வெவ்வேறான பெயர்களில் இவ்வாறான உலகலாவிய ஊழல்களை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

2016 ஆம் ஆண்டு பணாமா பேப்பர் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்ட ICIJ வின் இரகசிய வெளியீடு தொடர்ந்தும் paradise papers என பல பெயர்களில் இடை இடையே தொடர்ந்து இரகசியஙகளை வெளியிட்டு வந்துள்ளது.

உலக தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதம மந்திகள், அமைச்சர்கள்,வியாபாரிகள், நடிகர்கள், விளையுட்டு வீர்ர்கள் இவ்வாறான பிரபலங்கள் சட்டரீதியற்ற முறையில், தம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முரனாக வரிகள் கட்டப்படாமல் சட்ட விரோதமாக சம்பாதித்து வெளிநாடுகளில் சேமித்து வைக்கும் பணம் சொத்து இன்னும் பல வகையாக சட்டரீதியற்ற இருப்புக்களின் உண்மைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறான இரகசியங்களை துப்பறிந்து வெளியிடும் நிறுவனங்கள், நிறுவன ரீதியில் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் அதன் உயர் நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டு இது ஒரு குழு அமைப்பாக இறங்குகிறது. அமெரிக்கா வாஷிங்க்டன் நகரை மையமாக கொண்டு இயங்கும் சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு அமைப்பு எனும் பெயரில் இயங்குகிறது.

 ICIJ ( lnternational consorium of investigative Journalist) சர்வதேச பத்திரிககையாளர்களின் ஒன்றிணைந்த புலனா‌ய்வு அமைப்பு என்ற பெயரில் இயங்கும் இவ்வமைப்பில் சுமார் 117 நாடுகளைக் கொண்ட  சுமார் 150 க்கும் மேற்பட்ட சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற செல்வாக்குமிக்க பத்திரிகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. சுமார் 600 சர்வதேச ரீதியில் செல்வாக்குப் பெற்ற பத்திகையாளர்கள் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். 

இவர்கள் வெளியிடும் இந்த ஆவணங்களும் குற்றச்சாட்டுக்களும் 100% உண்மையானதாகவும்  மிகத்துல்லியமாகவும் இருப்பதே இதன் முக்கியத்துவத்திற்காகான காரணமாகும்.

2016 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு ஆணவம் panama paper என்ற பெயரில் வெளிப்படுத்தப்பட்டது. இதில் அதிகமான இந்திய பிரபலங்களின் இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. 

2021 அக்டோபர் 02ஆம் திகதி ICIJ அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன பண்டோரா பேப்பர் இது வரையில் இவர்கள் வெளியிட்டு இரகசியங்களில் மிக முக்கியமானதாகும். மாபெரும் உலகத் தலைவர்கள், உலக தரப்படுத்தல் வரிசையில் வரும் மாபெரும் உலக கோடீஸ்வரர்கள் அடங்கி இருக்கும் இந்த பெயர் பட்டியலில் இலங்கை போன்ற சிறிய நாடு ஒன்றின் பிரஜைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

ICIJ அமைப்பு வெளியிட்டுள்ள பண்டோரா பேப்பர் சுமார் 3 TB database கொண்ட தரவு உள்ளடக்கியுள்ளது. இதில் 12 லட்சம் மின்னஞ்சல், சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள், 60 லட்சம் ஆவண கோப்புகள், உற்பட 11 மில்லியன் சாட்சி ஆவணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகிலேயோ இதுவரையில் வெளியாக இரகசியங்களில் ஆக பெரிய அற்புதமான ஒரு திகிலான ஒர செய்தியாக பண்டோரா பேப்பர் நோக்கப்படுகின்றது. 

உலகலாவிய ரீதியில் சட்டரீதியற்ற பணத்தையும் சொத்துக்டளையும் பாதுகாக்கும் 14 உலக நிறுவனங்களில் இருந்தும் சட்டரீதியற்ற 12 நிதி நிறுவனங்களில் இருந்தும் இரகசியங்கள் கசிந்த தரவுகளைக் கொண்டு பன்டோரா பேப்பர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் இந்த ஆவணங்களில், 330க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், 130 கோடீஸ்வரர்களும், பிரபலங்களும், மோசடிகாரர்களும், போதை பொருள் கடத்தல்காரர்களும், அரச குடும்பத்தினர் மற்றும் மத தலைவர்களும் அடங்குவர். இதில் இலங்கையின் 30 பொரும்புள்ளிகளின் பெயர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.