சமையல் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே நங்கூரமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அது விரைவில் சரிசெய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிற்றோ நிறுவனத்துக்கு சொந்தமான 4,000 மெற்றிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.