புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் வகை இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று பதிவாகிய ஆறு நாடுகளில் அரசாங்கம் மூன்று நாட்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
விமான நிலையத்தில் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் அனைவரின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சும் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இது தொடர்பில் விசேட கையடக்க தொலைபேசி செயலி (App) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)