அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் உரிமையாளர்களால் பொருட்களை வெளியே எடுக்க முடியாததன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப செய்திப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
10,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான இறக்குமதி செய்யப்பட்ட சீனி கிட்டத்தட்ட 350 கொள்கலன்கள் துறைமுகத்தில் காணப்படுகின்றது.
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான தட்டுப்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் விளைவாக கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெளியே எடுக்கப்படாமல் இருப்பதால், இலங்கையில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)