இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கி இருக்கிறது.
நடப்பு உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை சந்திக்க உள்ளது. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக அரையிறுதி செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது.
இந்த நிலையில்தான், இந்திய அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சமூகவலைதளங்களில் அவர்கள் வறுபடாத நாட்கள் இல்லை. ஆனால் வீரர்களை விமர்சிப்பது நியாயம் என்ற போதிலும் கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்குறிவைத்து சமூக வலைத்தளங்களில் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அதிலும், விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்த தம்பதியின் 9 மாதங்கள் நிரம்பிய பச்சிளம் பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியாக டுவிட்டர் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த ட்வீட்டர் இப்போது டெலிட் செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் ஸ்கிரீன் ஷாட்டில் எடுக்கப்பட்டு பலராலும் கடும் கண்டனங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
ஒரு கிரிக்கெட் வீரர் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரது மகள் பாலியல் ரீதியாக ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ள சம்பவம் பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. இன்னும் சிலர் இந்த ட்வீட் பாகிஸ்தான் நாட்டிலிருந்து செய்யப்பட்டது இந்தியர்களை மோசமாக காட்டவேண்டும் என்ற சதி, இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியிருக்கிறது. டெல்லி காவல்துறைக்கு இது தொடர்பாக அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண்ணின் உடலை பற்றி மோசமாக கருத்து பதிவிடுவது மிகவும் சீரியஸ் விஷயம் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த சம்பவம் வெட்கக்கேடானது உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.