2021 உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடரின் 29 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
சார்ஜாவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களைப்பெற்று தோல்வியை தழுவியது.