இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசி டி20 சர்வதேச பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
24 வயதான இவர், இந்த ஆண்டு 34 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார், இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, டி20 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
பவுலர்கள் தரவரிசையில் இலங்கையின் ஆல் ரவுண்டர் வணிந்து ஹசரங்கா 776 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கைக்காக 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
ஹசரங்கா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசரங்காவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி 770 இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்தின் அடில் ரஷீத் 730 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 723 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலும் இருக்கிறார்கள்.
இதில் முதல் 10 இடங்களில் எந்தவொரு இந்திய பந்துவீச்சாளர்களும், பாகிஸ்தானை சேர்ந்த பவுலர்களும் இடம்பெறவில்லை.
பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 834 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கடுத்து இங்கிலாந்தின் டேவிட் மலான் 798 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 731 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 714 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளார்.
இதில் மற்றொரு இந்திய வீரரான கே.எல் ராகுல் 678 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார்.

(யாழ் நியூஸ்)