அனைத்துப் பாடசாலைகளிலும் 10,11,12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் 2021 நவம்பர் 08 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த தரங்களுக்குப் பொறுப்பான அனைத்து கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களையும் திங்கட்கிழமை (08) முதல் கடமைக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், கர்ப்பிணிப் பணியாளர்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் வேலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள், அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தியாவசிய சூழ்நிலைகளில் மட்டுமே அழைக்கப்படுவார்கள்.
பாடசாலைக்கு திரும்பும் முதல் சில நாட்களில் மாணவர்கள் பாடசாலை சீருடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களை தகுந்த சாதாரண உடையில் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மேலும் அறிவுறுத்துகிறது. (யாழ் நியூஸ்)