கொழும்பின் பல பகுதிகளில் நாளை (30) இரவு 10.00 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 05.00 மணி வரை 07 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று அறிவித்துள்ளது.
மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகர, பண்டாரநாயக்கபுர, நாவல - கொஸ்வத்தை பிரதேசங்கள் மற்றும் கொழும்பு திறந்த பல்கலைக்கழக பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்ட இடை வீதிகள் ஆகியவற்றில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடைப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.