சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (30) டிசம்பர் 01 முதல் 15 வரை அமுலில் இருக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொள்கிறார்.
அதன்படி மண்டபங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளில் ஆகக்கூடியது 200 பேர் வரையிலும் வெளியிடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் ஆகக்கூடியது 250 பேர் வரையிலும் கலந்துக்கொள்ள முடியும்.
வழிகாட்டுதல்களின் முழுமையான தொகுப்பு பின்வருமாறு,