நேற்று (30) காலியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தை உடைத்து பால் மா பொதிகள் சிலவற்றை ஒருவர் திருடியுள்ளார்.
இவ்வாறு காலி மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் மாடியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மேலும் ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.