ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (17) மாலை திடீர் விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஊவா மாகாணத்தின் பரணகம மற்றும் ஹாலிஎலவுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள பலகையிலான பாலத்தை கடந்து செல்ல முட்பட்ட நிலையில் டிலான் பெரேரா திடீரென உடைந்த பலகையொன்றின் மீது தவறுதலாக கால் வைத்ததில் கீழே விழ, உடனடியாக செயற்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றி மீட்டனர்.