இலங்கையின் தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு GSP (Generalized System of Preferences) வரிச்சலுகை இன் பிரகாரம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இச்சலுகையை பெற்றிருக்கும் இலங்கை சுமார் 7500 வகையிலான உற்பத்திப் பொருற்களை GSP வரிச்சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியும்.
2020 ஆம் ஆண்டு அறிக்கையின் படி மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 22.4% GSP வரிச்சலுகையின் அடிப்படையில் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது இலங்கையின் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளும் இலங்கையின் முக்கியமான பாதைகளில் ஒன்றாகும்.
இலங்கையின் மனித உரிமைகளில் திருப்தி கொள்ளாத நிலையின் காரணமாக, GSP வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டில் ரத்துச் செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து சிறு கைத் தொழில்கள் நீங்களாக, பாறிய அளவிளான 25 ஆடைத் தொழிச்சாலைகள் இலங்கையில் மூடப்பட்டதாக JVP பாரளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க வின் பாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் G L பீரிஸ் தெரிவித்ததாக அப்போதைய பாராளுமன்ற கேள்வி பதில் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், 2015 இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு பின்னர், GSP+ சலுகையைப் பெறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், முதற்கட்டமாக இதற்கான அஸ்திவாரத்தை நிலைப்படுத் ஆரம்பித்தது.
வடக்கில் விவசாய காரணிகளை விடுவித்தல், வடக்கில் இராணுவ குறைப்பு, இன நல்லிணக்க முயற்சி, கருத்துச் சுதந்திரம், பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தன.
இதன் அடிப்படையிலேயே, நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், GSP+ வரிச்சலுகையை மீண்டும் வழங்க இணங்குவதாக ஐரோப்பிய ஆணையம் 2015 ஆம் ஆண்டு மீண்டும் அறிவித்தது.
இலங்கையின் 2015 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஆட்சிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளில் முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவு அன்று எடுக்கப்பட்பட்டது.
எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு பிரகடனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், நல்லாட்சி, கருத்துச் சுதந்திரம், இன மத ஒற்றுமைகளை வளர்பதில் அரசு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட 27 விடயங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியமான நிபந்தனைக்கு இலங்கை இணங்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தளிலும், இதற்கான இலங்கையின் ஒப்புதளிலும் மீண்டும் வழங்கப்படிருந்தது.
இதன் அடிப்படையில் 2015 க்கு அடுத்து வந்த காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் 4.7 பில்லியன் யூரோவுக்கு இருதரப்பு வர்த்தகம் இடம்பெற்றது. இதில் இலங்கையில் இருந்து 2.6 பில்லியன் யூரோவுக்கு உற்பத்திப் பொருட்கள் மீண்டும் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.
எனினும், இந்த சலுகையை மீள வழங்கியதன் அடிப்படையையும் நிபந்தனைகளையும் மீ்ண்டும் இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் மீ்ண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்துலக பொதுவான நிபந்தனைகள், உரிமைகள், சர்வதே பொதுவான பிரகடனங்களை திருப்தியளிக்கும் வகையில் அவற்றை மதித்துச் செயல்பட வில்லை என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆபத்தான இடத்தில் இருப்பதாக கடந்த ஜுன் மாதம் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களில் 705 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இப்பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
இந்த அறிக்கையை 15 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தார்கள். 40 பேர் நடுநிலை வகித்தார்கள் , இந்த தீர்மானம் அதிகப்படியான பெரும்பான்மையுடன் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது .
ஐந்து பக்கங்களைக் கொண்ட அறிக்கையை இலங்கை தொடர்பாக நீண்ட கண்காணிப்பின் , ஆய்வின் பின்னதாக உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை தெவித்திருந்தது.
இதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கடந்த வாரம்
இலங்கைக்கான கண்காணிப்பு , ஆய்வு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தாகள்.
இதன்போது இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டம், இன ஒற்றுமைகள், கைதுகள், கருத்துச் சுதந்திரம், உற்பட பல்வேறுபட்ட விடயங்களில
தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளதை இவர்கள் கண்கானிப்புச் செலுத்திய துறைகளில் இருந்து ஊகிக்க முடிகின்றது.
இவர்கள் இலங்கையிலுள்ள பல முக்கியஸ்தர்கள் உட்பட, எதிர் கட்சி உற்பட பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் சந்தித்து நிலைமைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நடைபெற்ற சந்திப்புக்களில் சகல தரப்பினரும் ஒரே மாதிரியான தகவல்களையும், நாடு தற்போது இருக்கின்ற பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு, GSP தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் சகல தரப்பினரும் இலங்கையில் நிலவும் அச்சமான சூழ்நிலைகள் , மத நிந்தனைகள், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல், அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், இனவாத கருத்துக்களுக்கு அரசு கூடிய கவனங்கள் செலுத்த வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு இவற்றை கடுமையான அழுத்தங்களை கொடுக்க வேண்டுமெனவும் கருத்தொருமித்த வகையிலான கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இதனடிப்படையில் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில்
இக்குழுவானது ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானங்கள் அமையும்.
மேலும் இது தொடர்பாக இலங்கையின் முக்கியஸ்தர்களுடான சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம் GSP வரிச்சலுகையை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வழி முறைகளும் ஆலோசனைகளும், கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது இலங்கை தரப்பு அவர்களின் கோரிக்கைக்கு இசைவான பதில்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதே தரத்தில் அதன் பிரகாரம் மற்றியமைப்தாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதற்கு மத்தியில் சர்வதேச அவதானம் நாட்டின் மீது குவிந்திருக்கும் நிலையிலும், அதிலும் சர்வதே அவதானிகளும் நாட்டில் தங்கி இருக்கும் நிலையிலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்கான நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாத சிலரின் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் அவதானிகளின் அறிக்கைகளில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
நாடு தற்போது எதிர் நோக்கியுள்ள அந்நிய செலவாணி பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், GSP வரிச்சலுகை ரத்துச் செய்யப்படுவதானது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே GSP வரிச்சலுகையை தக்கவைத்துக் கொள்வதா ? நழுவ விடுவதா ? பந்து இலங்கையின் கையில்.
GSP கை நழுவுமா ? இறுக்கமான நிபந்தனைகளுடன் மீண்டும் மீளக்கிடைக்குமா ? தீர்ப்பை தீர்மானிக்கும் வாய்ப்பு இலங்கை வசம்.

- பேருவளை ஹில்மி